Sunday, October 4, 2009

கதைத்து பிரியோசனம் இல்ல


கேட்டேன்.
கேள்வி என்ன?

மாட்டேன்.
இப்ப மாட்டவா என்ன?

தமிழும் புரியவில்லை.
தலை காலும் புடியவில்லை.

கொழும்புத் தமிழாம்.
கொஞ்சம் நான் அவனைக் கேட்டபோது.

தமிலுக்கென்ன கொழும்பு கோட்டை?
காதலுக்கென்ன கண் கண்டறியாத கேள்வி?

சரி என்றேன், சரிந்தேன்.
சந்தத்தில் சிலகாலம் சக சகி பந்தத்தில் சிலகாலம்.

சரிவை சரிசெய்ய சர்வமும் சாட்சியாய் திருமணம்.

காதல் திருமணம், காதில் திருமணம்.
கடைசியில் சீதணம்.
சரிவிடு கலிகாலம்.

சீதணக்காசில சிங்கன்
இங்க இருந்து இங்கிலாந்துக்கு.
இருக்குற என்னை ஈரொரு வார்த்தை கேகலை.

அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் நான்
இங்கிலாந்து வந்தது சரி சதோசம்.

இவருக்கு சரி சந்தேகம்.

காதல் காவியங்கள்
கால் வாரிய
கானல் நீர்.

கதைத்து பிரியோசனம் இல்ல
கண நேரம் கனமான என் காதலை.

No comments:

Blogs I read!